திரவுபதியம்மன் கோவிலுக்கு பூட்டு விருத்தாசலம் அருகே பரபரப்பு
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே திருவிழா நடத்துவதில், இருதப்பினரிடையே உள்ள கருத்து வேறுபாட்டால், கோவிலுக்கு பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அடுத்த மருங்கூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம்.கடந்த 2016ல் கோவில் திருப்பணி துவங்கியதால், தற்காலிகமாக திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டது. கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்தாண்டு டிசம்பரில் கும்பாபி ேஷகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு பின், நடப்பாண்டு தீமிதி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது, தர்மகர்த்தா சேதுபதி தரப்பினர் பழைய நடைமுறைப்படி, 7 உபயதாரர்கள் தலைமையில் திருவிழா நடக்கும் என கூறினர். அதற்கு அதேப் பகுதியைச் சேர்ந்த வசந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, 18 உபயதாரர்கள் தலைமையில் திருவிழா நடத்த வேண்டும் என்றனர். இந்நிலையில், தீமிதி திருவிழா நடத்துவதற்காக இன்று (20ம் தேதி) காப்பு கட்டும் நிகழ்ச்சி நடத்த, நேற்று (19ம் தேதி) மாலை தர்மகர்த்தா சேதுபதி தரப்பினர் கோவிலில் ஒலிபெருக்கி கட்டிவிட்டு, கோவிலை பூட்டிச் சென்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வசந்தன் தரப்பினர், மேலும் ஒரு பூட்டை போட்டு கோவிலை பூட்டினர். இதனால் இருதப்புக்குமிடையே கோஷ்டி மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.இதையறித்த ஏ.எஸ்.பி.,அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், 10 நாட்களுக்குள் சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் அமைதிக்கூட்டம் நடத்தி, தீர்வு காணப்படும். அதுவரை இரு தரப்பினரும் கோவிலை திறக்க கூடாது என, போலீசார் கூறினர். இதனை ஏற்று, அனைவரும் கலைந்து சென்றனர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், விஜயகுமார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X