'கோவை ரயில் நிலையத்தை உலகத்தரத்துக்கு உயர்த்த வாய்ப்பு' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'கோவை ரயில் நிலையத்தை உலகத்தரத்துக்கு உயர்த்த வாய்ப்பு'
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 

கோவை:''கோவை ரயில் நிலையத்தை உலகத்தரத்துக்கு உயர்த்தும் வாய்ப்பு வந்துள்ளது. இதுதொடர்பான திட்ட அறிக்கையை தென்னக ரயில்வே தயார் செய்து வருகிறது,'' என்று, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்தார்.பார்லி ரயில்வே நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ள எம்.பி.,க்கள், குழு தலைவர் ராதாமோகன் சிங் தலைமையில் நேற்று கோவை ரயில் நிலையத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில் பங்கேற்ற பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறியதாவது:பா.ஜ., மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிலைக்குழுவினர், கோவை ரயில் நிலையத்தை ஆய்வு செய்தனர். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், 'ஒன் ஸ்டேஷன் ஒன் புராடக்ட்' என்ற பிரதமரின் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்றும் ஆய்வு செய்தனர்.இந்த மாவட்டத்தில் உற்பத்தியாகும் பொருட்களை, மிகக்குறைந்த வாடகையில் கடை போட்டு விற்றுக்கொள்ளும் வாய்ப்பை ரயில்வே ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கடைகளை நிலைக்குழுவினர் பார்வையிட்டனர்.பா.ஜ., சார்பில், கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.வடகோவை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். ரயில்கள் நிற்கவும், பயணிகள் ஏறவும், இறங்கவும் வசதிகள் செய்ய வேண்டும். அதன் மூலம் கோவை சந்திப்பில் கூட்ட நெரிசலை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.கோவை ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்ற தமிழகத்துக்கு வாய்ப்பு வந்துள்ளது. அது தொடர்பாக திட்ட அறிக்கையை தென்னக ரயில்வே தயார்செய்து வருகிறது.ரயில் நிலையத்துக்கு தேவையான நிலம் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன. உலகத்தரம் வாய்ந்த காந்தி நகர் ரயில் நிலையம் போல, கோவை ரயில் நிலையத்தை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக, மத்திய அமைச்சரிடமும் பேச உள்ளேன்.ரயில்வே நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ள ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், உ.பி., மாநில எம்.பி.,க்கள் கோவை வந்திருந்தனர். தமிழகம் சார்பில் தி.மு.க.,வின் டி.ஆர்.பாலு இந்த குழுவின் உறுப்பினர். அவர் வந்திருந்தால் வசதியாக இருந்திருக்கும். அவர் வராதது எங்களுக்கும் ஏமாற்றம் தான்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X