கிச்சிப்பாளையத்தில் 280 வீடுகள் கட்டுமானப்பணி; நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய எம்.டி., ஆய்வு
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சேலம்: சேலம் மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், 24 ஆயிரத்து, 358 பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கட்டுமானத்தின் நிலைக்கு ஏற்ப, 2.10 லட்சம் ரூபாய் மானியம், 4 தவணையாக பயனாளி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அதில், 18 ஆயிரத்து, 722 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதை, நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய மேலாண் இயக்குனர் கோவிந்தராவ் நேற்று ஆய்வு செய்தார்.
பின் அவர் கூறியதாவது: சேலம் மாநகராட்சியில், பெரியார் நகர், காந்தி நகர், நேரு நகர், அல்லிக்குட்டையில் மறுகட்டுமான, 1,456 குடியிருப்புகள், 138.78 கோடி ரூபாய்; அஸ்தம்பட்டி, மணக்காடு, திடீர் நகரில், 636 குடியிருப்புகள், 62.32 கோடி; சேலத்தாம்பட்டி, 496 குடியிருப்புகள், 39.81 கோடி; வாழப்பாடி, புதுப்பாளையத்தில், 144 அடுக்குமாடி குடியிருப்பு, 11.94 கோடி; இடைப்பாடியில், 352 அடுக்குமாடி குடியிருப்பு, 31.68 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன.

கோட்டகவுண்டம்பட்டியில், 216 அடுக்குமாடி குடியிருப்பு, 17.95 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பும், 400 சதுரடி பரப்பளவு. அதில் ஒரு வரவேற்பு அறை, படுக்கை, சமையல், குளியல், கழிப்பறை உண்டு. ஒரு வீட்டின் மதிப்பீடு, 8.54 லட்சம் ரூபாய். மத்திய - மாநில அரசு வழங்கும் மானியம் போக, பயனாளி பங்குத்தொகை, 2 லட்சத்து, 4,275 ரூபாய். அதில், 170 பயனாளிகள் முழு தொகையை செலுத்தி, குடியிருப்பும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதி பயனாளிகள் பட்டியல் ஆய்வில் உள்ளது.

கிச்சிப்பாளையம், காந்தி நகரில், 280 வீடுகள், 17.77 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் சிமென்ட், எம்.சாண்ட், கற்கள், கம்பிகள், குழாய்கள் ஆகியவை தரமாக உள்ளதா என ஆய்வு நடந்தது. அதை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X