போலீஸ் டைரி.
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

பழம் பறிக்க சென்ற சிறுவன் தவறி விழுந்து பலி
சத்தியமங்கலம்: கெத்தேசால் பகுதியை சேர்ந்த மாதேவன் மகன் மாதேஷ்,11; ஆக, 16ம் தேதி மதியம் அந்த பகுதியிலிருந்த நாவல் பழ மரத்தில் ஏறி பழம் பறிக்க சென்றான். அப்போது கால் தவறி விழுந்ததில் படுகாயமடைந்தான். அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலனில்லாமல் மாதேஷ் இறந்து விட்டார். ஆசனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கீழ்பவானி வாய்க்காலில் சிறுவன் உடல் மீட்பு

கோபி: கோபி அருகே குப்பந்துறை என்ற இடத்தில், கீழ்பவானி வாய்க்கால் கரை ஓரத்தில், 5 வயது சிறுவன் உடல் மிதப்பதாக, கடத்துார் போலீசாருக்கு நேற்று மாலை, 3:00 மணிக்கு தகவல் கிடைத்தது.கடத்துார் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர், சிறுவனின் உடலை மீட்டு விசாரித்தனர். சிறுவனின் சுயவிபரம் தெரியவில்லை. வாய்க்கால் கரையில் விளையாடி கொண்டிருந்தபோது சிறுவன் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.
பாம்பு கடித்து பெண் பலி
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அடுத்த பஞ்சலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ரகுநாதன்,30; புகளூர் பேப்பர் மில்லில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி திவ்யபாரதி, 28. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். நேற்று காலை திவ்யபாரதி தன் வீட்டில் உள்ள தண்ணீர் பைப்பின் கேட்வாலை திறக்க பைப்பின் மீது கை வைத்தபோது அதிலிருந்த பாம்பு திவ்யபாரதியின் கையில் கடித்தது. உடனடியாக சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
மூதாட்டியின் உடல் மீட்பு
கோபி: கோபி அருகே நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் மாராள், 72; இவரது உடல் வெள்ளங்கோவில் அருகே கீழ்பவானி வாய்க்காலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு மிதந்தது. சிறுவலுார் போலீசார் உடலை மீட்டனர். அவரின் மகள் சுதா, 29, அளித்த புகாரின்படி, மூதாட்டி மாராள், வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில், சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பைக் திருடன் கைது
ஈரோடு: ஈரோடு என்.ஜி.ஓ., காலனியில் வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், கடந்த மாதம் காணாமல் போனது. அதுபோல, அப்பகுதியில் தொடர் வாகன திருட்டு நடந்து வந்தது. ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த இம்ரான்,29, திருட்டு பைக்கை ஓட்டி வந்தபோது கைது செய்யப்பட்டு, பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X