பால் கொள்முதலுக்கு 'டிஜிட்டல் மீட்டர்' தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., யோசனை | ஈரோடு செய்திகள் | Dinamalar
பால் கொள்முதலுக்கு 'டிஜிட்டல் மீட்டர்' தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., யோசனை
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 

சென்னிமலை : பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பால் கொள்முதல் செய்ய, 'டிஜிட்டல் மீட்டர்' பொருத்த, ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பால் வளத்துறை அமைச்சருக்கு, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் மன்றாடியார், மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பாலை வாங்கும்போதே, 'டிஜிட்டல் மீட்டர்' வைத்து அளவீடு மற்றும் தரத்தை பரிசோதனை செய்து கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்து, வினியோகம் செய்யும் வரை, 'டிஜிட்டல் மீட்டர்' பொருத்தினால், பால் அளவு, தரம் குறைவு ஏற்படாது.
ஆவினிலிருந்து, சென்னைக்கு பால் அனுப்புவதில் குறைவு ஏற்பட்டால், பால் கரந்து சங்கத்திற்கு கொடுக்கும் விவசாயிகளிடமிருந்து, பணம் பிடித்துக்கொள்ளப்படுகிறது. இதை சரி செய்ய, அனைத்து இடங்களிலும் அளவு, தரத்தை பரிசோதனை செய்ய, ஆவின் நிறுவனம், 'டிஜிட்டல் மீட்டர்' பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X