60 இடங்களில் மது விற்பனை; தி.மு.க.,வினர் போலீசில் புகார் | நாமக்கல் செய்திகள் | Dinamalar
60 இடங்களில் மது விற்பனை; தி.மு.க.,வினர் போலீசில் புகார்
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 

பள்ளிபாளையம் : பள்ளிபாளையத்தில் சட்டவிரோதமாக, 60 இடங்களில் மதுபானம் விற்கப்படுவதாக, தி.மு.க.,வினர் போலீசில் புகார் அளித்தனர்.
பள்ளிபாளையம் முன்னாள் கவுன்சிலர் செல்வம், தி.மு.க., கவுன்சிலர் வினோத்குமார் உள்ளிட்ட தி.மு.க.,வினர், நேற்று பள்ளிபாளையம் போலீசில் அளித்த புகாரின் கூறியிருப்பதாவது: பள்ளி பாளையம் நகரில், 60 இடங்களில் சட்டவிரோதமாக சந்துக்கடை என்ற பெயரில், 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. குடியிருப்பு பகுதிகள், மளிகை கடைள், டீக்கடைகளிலும் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. திருட்டு, அடிதடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆகையால், உடனடியாக சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து புகார் கொடுத்த தி.மு.க.,வினர் கூறுகையில், ''புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்,'' என்று தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X