ரூ.51.21 லட்சம் மதிப்பில் சமத்துவபுரம் புனரமைப்பு | நாமக்கல் செய்திகள் | Dinamalar
ரூ.51.21 லட்சம் மதிப்பில் சமத்துவபுரம் புனரமைப்பு
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 

வெண்ணந்துார் : வெண்ணந்துார் அடுத்துள்ள ஈ.வெ.ரா., நினைவு சமத்துவபுரத்தில், 51.21 லட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே, ஈ.வெ.ரா., நினைவு சமத்துவபுரம் உள்ளது. இந்த சமத்துவபுரம் கடந்த, 1999-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு மொத்தம், 100 வீடுகள் உள்ளன. அத்துடன் தார்சாலைகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சமுதாய நலக்கூடம், நுாலகம், பகுதிநேர ரேஷன் கடை, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த சமத்துவபுரத்தில் புனரமைப்பு பணிகளை செய்ய, தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளது.
அதன்படி, சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை புணரமைப்பு செய்ய, 51.21 லட்சம் ரூபாயும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தார்ச்சாலை, அங்கன்வாடி, பள்ளி கட்டடம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை புனரமைக்க, 33.70 லட்சம் ரூபாயும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக நுழைவு வாயில் கட்ட, 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X