ஆற்றில் வெள்ளம் குறைந்ததால் இயல்பு நிலைக்கு திரும்பிய மக்கள் | நாமக்கல் செய்திகள் | Dinamalar
ஆற்றில் வெள்ளம் குறைந்ததால் இயல்பு நிலைக்கு திரும்பிய மக்கள்
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 

பள்ளிபாளையம் : ஆற்றில் வெள்ளம் குறைந்ததால், பள்ளிபாளையம் கரையோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வந்ததால், கடந்த, 3ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பள்ளிபாளையம் பகுதியில் ஆற்றோரத்தில் இருந்த குமரன்நகர், அக்ரஹாரம், நாட்டகவுண்டம்புதுார், பாவடிதெரு, சந்தைபேட்டை, ஜனதாநகர் உள்ளிட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால், 300க்கு மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. அங்கிருந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஒரு வாரத்திற்கு பிறகு படிப்படியாக தண்ணீர் குறைந்தது. ஆனாலும் பல வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டன.
கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் வரத்து மிகவும் குறைந்ததால், எப்போதும் போல ஆற்றில் தண்ணீர் செல்கிறது. வீடுகளில் சூழ்ந்துள்ள தண்ணீரும் வடிந்து விட்டது. கரையோரம் வசிக்கும் பொதுமக்கள், எப்போதும் போல தங்களின் வழக்கமான பணியில் ஈடுபட துவக்கி விட்டதால், கரையோர பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X