ஆவணி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

நாமக்கல் : ஆவணி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட முருகன் கோவில்களில், சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது.
நாமக்கல்-மோகனுார் சாலையில், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. ஆவணி கிருத்திகையான நேற்று, காலை, 8:00 மணிக்கு, சுவாமிக்கு, பால், வெண்ணெய், நெய், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில், சுவாமி எழுந்தருளினார். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்தனர்.
மோகனுார்: காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆவணி கிருத்திகையை முன்னிட்டு, காலை, 11:00 மணிக்கு, அபிேஷகம், ஆராதனை நடந்தது. தங்க கவசத்தில் சுவாமி எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல், மாவட்டம் முழுவதும், முருகன் கோவில்களில், சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது.

மல்லசமுத்திரம்: ஆவணி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு, மல்லசமுத்திரம் சந்துமாரியம்மன் கோவிலில், காலை, 10 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மல்லசமுத்திரம் பெரியமாரியம்மன் கோவிலிலும் பூஜைகள் நடத்தப்பட்டு, சந்துமாரியம்மன் நண்பர்கள் குழு சார்பில், பக்தர்களுக்கு கூழ், வெண்பொங்கல், புளிசாதம் பிரசாதமாக வழங்கப்பட்டன.
மல்லசமுத்திரம் அடுத்துள்ள காளிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவிலில், நேற்று, கிருத்திகை நட்சத்திரம் மற்றும் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, உற்சவர் கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பகல், ஒரு மணிக்கு, பால் மற்றும் பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு, சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தத்தகிரி முருகன் கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு, முருகன் சுவாமிக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபி ேஷகங்கள், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X