கிருஷ்ண ஜயந்தி விழா..
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



மானாமதுரை-மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட வேதியரேந்தல், பொன்னாகுளம், சிப்காட், புலிக்குளம் உள்ளிட்ட ஊர்களிலும் இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பெரும்பச்சேரி தாயமங்கலம் சாலைக்கிராமம் சூராணம் பகுதிகளிலும் கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு வழிபாடு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. குழந்தைகள் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு வந்திருந்தனர்.

காரைக்குடி

அமராவதி புதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி மற்றும் சாரதா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை யதீஸ்வரி சாரதேஸ்வரி பிரியா தொடங்கி வைத்தார். முதல்வர் சிவசங்கரி ரம்யா, இயக்குனர் மீனலோச்சனி, இசை ஆசிரியை ஜெயலட்சுமி கல்லூரி பேராசிரியர்கள் பள்ளி முதல்வர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.* காரைக்குடி கல்லுாரி சாலை ராமநவமி மகோத்சவ சபாவில் கோகுலாஷ்டமி விழா ஆக.28 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. மூன்று நாட்களுக்கு கிருஷ்ணாபுரம் சுந்தரராமனின் கிருஷ்ணர் பற்றிய உபன்யாசமும், ஆக.22, 23 இரண்டு நாட்கள் கோவிந்தபுரம் கோபால் தாஸ் குழுவினரின் நாம சங்கீர்த்தனமும், ஆக.24ல் காரைக்குடி இன்னிசை நிகழ்ச்சியும், ஆக.25 புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியும், ஆக.26 மயிலாடுதுறை கணநாதர் பொம்மை நாடக சபா வழங்கும் பொம்மலாட்டமும், ஆக.27, 28 ஆம் தேதி காப்பணாமங்களம் எஸ். வெங்கட்ராம பாகவதர் குழுவினரின் அஷ்டபதி, திவ்ய நாம பஜனை, ராதா கல்யாணம், ஆஞ்சநேய உற்ஸவமும், ஆக.28 ஆம் தேதி மாலை சென்னை கோபாலகிருஷ்ணன் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருப்புத்துார்
திருப்புத்தூர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. காலை 10:00 மணிக்கு உற்ஸவ கிருஷ்ணனுக்கு அபிஷேகம், சிறப்புத் தீபாராதனை நடந்தது. கண்ணன் பிறப்பை முன்னிட்டு ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் அருள்பாலித்தார். தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலையில் தேரோடும் வீதியில் உறியடி விழாவில் பக்தர்கள் பங்கேற்றனர். பரதநாட்டியம், கோலாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணர் வேடத்தில் குழந்தைகள் பங்கேற்றனர். இரவு 7:00 மணிக்கு உற்ஸவ கண்ணனுக்கு தீபாராதனை நடந்தது. சுவாமி திருவீதி உலா வலம் வந்தார். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள், யாதவர் உறவின்முறையார் செய்தனர்.

தேவகோட்டை
கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் சிறப்பு திருமஞ்சனமும் தொடர்ந்து சுவாமி கிருஷ்ணர் அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தேவகோட்டை யாதவ தொடக்கப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வளாகத்தில் உள்ள உள்ள கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பள்ளி குழந்தைகள் கிருஷ்ணர் வேடத்தில் வந்திருந்தனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சங்க செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சேகர், பள்ளி முதல்வர் அனிதா உட்பட நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கிருஷ்ணரை தரிசனம் செய்தனர்.* ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளியில் கிருஷ்ணன் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பள்ளி தாளாளர் சோமநாராயணன் முன்னிலை வகித்தார்.*ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா பள்ளி தாளாளர் காளிச்சரண் தலைமையில் நடந்தது. முதல்வர் அம்பிகா, துணை முதல்வர் கலா முன்னிலை வகித்தனர். நிர்வாக அதிகாரியான துணை முதல்வர் தேன்மொழி வரவேற்றார். குழந்தைகள் கிருஷ்ணர் வேடத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியை இலக்கியா நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X