ஆக.27ல் மாறநாயனார் குருபூஜை | சிவகங்கை செய்திகள் | Dinamalar
ஆக.27ல் மாறநாயனார் குருபூஜை
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 



இளையான்குடி-இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழா ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் ஆக. 27ஆம் தேதி நடைபெற உள்ளது.மாறநாயனார் அவதரித்த இளையான்குடியில் ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மகம் நட்சத்திரம் அன்று மாறநாயனார் குருபூஜை விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா ஆக. 27ல் இளையான்குடி மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தினரால் கொண்டாடப்பட உள்ளது. காலை 9:00 மணிக்கு சிறப்பு ஹோமத்துடன் மூலஸ்தான அபிஷேகம்,உற்ஸவர் அபிஷேகம், மதியம் 1:00 மணிக்கு மகா தீபாராதனை அன்னம் பாலிப்பு நடைபெற உள்ளது.மாலை 5:30 மணிக்கு சூரியனார் கோயில் ஆதினம் சிவாக்கர தேசிகர் சுவாமி சொற்பொழிவு நடைபெறுகிறது. இரவு 9:00 மணிக்கு மாறநாயனாருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த ஜோதி காட்சியும், ரிஷப வாகனத்தில் சுவாமியும் மாறநாயனாரும் திருவீதி உலா நடைபெறும். ஏற்பாடுகளை இளையான்குடி மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தார் செய்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X