விவசாயிகள் வியாபாரிகளாக மாற வேண்டும் | மதுரை செய்திகள் | Dinamalar
விவசாயிகள் வியாபாரிகளாக மாற வேண்டும்
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 

மேலுார்--விவசாயிகள் வியாபாரிகளாக மாறி விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தால் வாழ்க்கைத்தரம் உயரும்என ஆலோசனை கூட்டத்தில் யோசனை தெரிவித்தனர்.



மேலுாரில் முல்லை பெரியாறு ஒரு போக பாசன சங்கம், வேளாண் அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இக் கூட்டத்திற்கு விவசாய சங்கத் தலைவர் முருகன் தலைமைவகித்தார். செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். இதில் வேளாண் உதவி இயக்குநர் செல்வி பேசுகையில், ''விவசாயிகள் மண் வளத்தை முதலில் ஆய்வு செய்து அதன் தன்மைக்கேற்ப பயிரிட வேண்டும். புதிய தொழில்நுட்பமான நேரடி நெல் விதைப்பு அவசியம். அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் செல்வினங்கள் குறைவு'' என்றார்.மேலும் திருந்திய நெல் சாகுபடி, பூச்சிகளை அழிக்கும் சோலார் லைட் மற்றும் மஞ்சள் அட்டை, அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கிய வளமான மண்ணை உருவாக்குவது குறித்து விளக்கினார்.விவசாயிகளிடம் ஒற்றுமையின்மையினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கினார். விவசாயிகள்வியாபாரிகளாக மாறினால்தான் விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்து, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X