வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னை இடையகுப்பத்தைச் சேர்ந்தவர் ராஜா, 42; இசை கச்சேரி குழு நடத்தி வந்தார். மனைவி மற்றும் இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.இசைக்குழுவில் பாடகியாக உள்ள சித்ரா என்ற பெண்ணுடன், ராஜாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. அவருடன் வீடு எடுத்து வசித்தார்.நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது, சித்ராவை பயமுறுத்த, சித்ரா படுத்திருந்த அறையின் பக்கத்து அறையில், மொபைல்போனில் வீடியோ பதிவாகுமாறு செய்துவிட்டு, மின்விசிறியில் துாக்கிட்டுக் கொண்டு மிரட்டல் விடுத்தார்.சிறிது நேரத்துக்கு பின், தன் அறையிலிருந்து சித்ரா எழுந்து சென்று பார்த்தபோது, ராஜா துாக்கில் இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார்.