சில வரி செய்தி
Added : செப் 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கல்லுாரி மாணவி மாயம்



'பேஸ்புக்' காதலை தந்தை கண்டித்ததால், மாயமான கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். கோவை, வேலாண்டிபாளையத்தை சேர்ந்த, 19 வயது மாணவி தனியார் கல்லுாரியில் பி.காம்., 3ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி, பேஸ்புக் மூலம் அறிமுகமான வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். மாணவியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தார். இதனால் மாணவி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இச்சூழலில், இரண்டு நாட்களுக்கு முன் தனது மொபட்டில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.சாய்பாபாகாலனி போலீசில் தந்தை அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.



சரக்கு ஆட்டோ மோதி சிறுவன் பலி



வெள்ளலூர் அருகேயுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த கோபால், மகன் தினேஸ்வரன், 11. அப்பகுதியிலுள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை கோபால் தனது மகனை, ஸ்கூட்டரில் அழைத்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த சரக்கு ஆட்டோ, ஸ்கூட்டர் மீது மோதியது.இதில் தினேஸ்வரன் படுகாயமடைந்தான். அங்கிருந்தோர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக கூறினர். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.



மது குடிக்க பணம் பறித்தவர்கள் கைது



ரத்தினபுரி, சங்கனுார் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன், 49; பழ வியாபாரி. இவர் இரண்டு நாட்களுக்கு முன் அங்குள்ள, 7வது வீதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர், மது அருந்த பணம் கேட்டனர். பணம் தர மறுத்ததால், கத்தியை காட்டி மிரட்டி, வியாபாரி பாக்கெட்டில் இருந்த, 500 ரூபாயை பறித்துச் சென்றனர்.புகாரின்பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது கண்ணப்ப நகரை சேர்ந்த பெயின்டர்கள் ராஜ்குமார், 39, ரமேஷ், 43 என்பது தெரிந்து இருவரையும் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்



மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோவை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று முன் தினம் இ.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இ.கம்யூ., மூத்த தலைவர் ஆறுமுகம் மற்றும் மாவட்ட செயலாளர் சிவசாமி தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உத்தேச மின் கட்டண உயர்வை அமல்படுத்த, மாநில அரசை நிர்பந்திக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.உள்ளாட்சி அமைப்புகளின் வீட்டு வரி மற்றும் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X