சேலம் மாவட்டம் முழுதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
Added : செப் 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சேலம் மாவட்டம் முழுதும், விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சேலம் ராஜகணபதி கோவிலில் நேற்று காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு பன்னீர், இளநீர், தயிர், 108 லிட்டர் பால், பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தீபாராதனை, பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு தங்க கவசம் சாத்துப்படி செய்யப்பட்டது.
முன்னதாக வேத மந்திரம் முழங்க கணபதி ஹோமம் நடந்தது. திரளான பக்தர்கள் வரிசையாக நின்று ராஜகணபதியை வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த கடைகளில் தேங்காய், பழம், வெற்றிலை, விநாயகர் சிலை விற்பனை ஜோராக நடந்தது. பக்தர்கள் வசதிக்கு முதல் அக்ரஹாரம் பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள், கோவில் வழியே இருசக்கர வாகனங்கள் செல்லாமல் இருக்கும்படி, மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ராஜகணபதி கோவிலில் சதுர்த்தி விழா வரும், 11 வரை நடக்க உள்ளது.

அதேபோல் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அருகே ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. செவ்வாய்ப்பேட்டையில் பாக்குபேட்டை சித்தி விநாயகர் கோவிலில் மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. செவ்வாய்ப்பேட்டை அக்ரஹாரத்தில் கையில் தராசு பருப்பு வகைகளுடன் வியாபாரம் செய்யும் வைசிய கணபதி; அம்மாபேட்டை பாபுநகரில் மகாபாரதம் எழுதும் வியாச கணபதி வைக்கப்பட்டிருந்தது.
சேலம் சுகவனேஸ்வரர், கோட்டை பெருமாள், மாரியம்மன், எல்லைப்பிடாரி அம்மன் என, மாநகரில் உள்ள கோவில்களில் பூஜைகள் செய்யப்பட்டன. வீடுகளில் சுவாமி படங்களை பூக்களால் அலங்கரித்து, கொழுக்கட்டை, பாயாசம், சுண்டல், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து, மக்கள் வழிபட்டனர். ஹிந்து அமைப்புகள், விழா குழு சார்பிலும், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு உணவு, சுண்டல், பாயாசம், பழங்கள் வழங்கப்பட்டன.
ரூ.1.50 லட்சம் நோட்டு
ஆத்துார் வெள்ளை விநாயகர் கோவிலில், மூலவருக்கு, 16 வகை அபிேஷக பூஜை நடந்தது. ராணிப்பேட்டை செல்வவிநாயகர் கோவில் வளாகத்தில், 18 அடி உயர விநாயகர் சிலை, 10 அடி உயர அலங்கார விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். சுவாமிக்கு, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது. விநாயகர் முன், 60 கிலோ லட்டு வைத்து வழிபட்டு, பிரசாதமாக வழங்கினர். ஆத்துார் சப்-டிவிஷன் பகுதியில், 107 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர்.
ஆற்றில் கரைப்பு
தாரமங்கலம் அருகே உள்ள பனஞ்சாரி, துட்டம்பட்டி பகுதியில், ஹிந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இரண்டை, அண்ணா சிலை அருகே வாகனங்களில் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அணைமேடு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்றபோது, தாரமங்கலம் போலீசார் தடுத்து நிறுத்தினர். பேச்சுக்கு பின் போலீசார் அனுமதி வழங்கி, இரு சிலைகளை, அணைமேட்டில் உள்ள சரபங்கா ஆற்றுக்கு கொண்டு சென்று அங்கு கரைக்கப்பட்டது. ஓமலுார் உட்கோட்ட சரகத்தில், 360 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. வீட்டில் வைக்கப்பட்ட சிறு சிலைகளை, ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளில் மக்கள் கரைத்தனர்.
பெரிய விநாயகர்
பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில், 13 அடி உயரத்தில், மாவட்டத்திலேயே பெரிய விநாயகர் சிலை உள்ளது. அங்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிேஷகம் செய்யப்பட்டது. சந்தன காப்பு, அருகம்புல், பூ மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.
இடைப்பாடி, கவுண்டம்பட்டி யோககணபதி கோவிலில் பூஜை செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, கல்வடங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றங்கரையோரம் சிலைகள் கரைக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், 100க்கும் மேற்பட்ட சிலைகளை, மேட்டூர் அணையின் கிழக்குக்கரை வாய்க்கால் பகுதிகளான மூலப்பாதை, பில்லுக்குறிச்சி வாய்க்காலில் கரைத்தனர். இதேபோல், சேலம் மாவட்டம் முழுதும், விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, கொரோனாவுக்கு பின் சதுர்த்தி களைகட்டியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X