'மத்திய அரசின் நல்ல கல்வி கொள்கைகள் ஏற்கப்படும்'
Added : செப் 21, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

திருநெல்வேலி:''பெற்றோர் கண்டிப்பும் கண்காணிப்பும் குறைந்துள்ளதால் மாணவர்களிடம் ஒழுக்கம் குறைந்துள்ளது,'' என, திருநெல்வேலியில் நடந்த தென் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற மாநில கல்விக் கொள்கை உயர் மட்டக்குழு தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றம் நீதிபதி டி.முருகேசன் தெரிவித்தார்.

தமிழக கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை அமல்படுத்துவதற்காக நீதிபதி டி.முருகேசன் தலைமையில் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழுவை முதல்வர் ஸ்டாலின் ஜூனில் அறிவித்தார். குழுவில் பல்வேறு துறைகளை சேர்ந்த 12 பேர் உள்ளனர். தென்மண்டல அளவில் நடந்த இக்கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.

உறுப்பினர்கள் சவிதா, பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன ஓய்வு பெற்ற பேராசிரியர் ராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலிருந்து கல்வியாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

முடிவில் நீதிபதி டி.முருகேசன் கூறியதாவது: இதே போல ஏழு மண்டல கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். கல்வியின் தரம் எல்லா மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்று பேசியவர்கள் விருப்பம் தெரிவித்தனர். கூட்டங்கள் முடிந்ததும் அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்.பள்ளி மாணவர்களின் ஏற்றத்தாழ்வு, நிதி ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்கப்படும். கூட்டத்திற்கு மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்தனர்.

வரும் கூட்டங்களில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க செய்வோம். கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் கருத்துக்களையும் கேட்போம். தேவைப்பட்டால் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கருத்து கேட்கப்படும். அதிக படிப்பு சுமையால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.மாநில கல்விக் கொள்கையில் தமிழக கலாசாரம், சமூகம் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படும்.

மத்திய கல்விக் கொள்கையில் நல்ல கொள்கைகள் இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆசிரியர்களுக்கு மேம்பட்ட தரமான கல்வி பயிற்சியளிக்கப்படும். ஆசிரியர்களின் சம்பளம், வேலை தொடர்பான வழக்குகளில் இந்த குழு தலையிடாது. நடப்பு ஆண்டில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. தரம் உயர்ந்துள்ளது. தரத்தை உயர்த்த இக்குழு பரிந்துரைக்கும். கல்வி கொள்கை குறித்த ஆலோசனைகளை stateeducation policy@gmail.com என மின்னஞ்சல் முகவரியிலும், 3வது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025 என்ற முகவரிக்கும் அக்.,15க்குள் அனுப்பலாம் என்றார்.



ஆப்சென்ட்@



@

கல்விக் கொள்கை உயர் மட்ட குழுவில் உறுப்பினர்களான எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் ராமானுஜம், செஸ் சாம்பியன் விஸ்வநாதன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X