தூத்துக்குடி:துாத்துக்குடி அருகே திருட்டு நகைகளை அணிந்து போஸ் கொடுத்தவர் போலீஸ் விசாரணையில் 19 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் என தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டு 126 பவுன் மீட்கப்பட்டது.
தூத்துக்குடிமாவட்டம் சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தை சேர்ந்தவர் கொடிமலர் 40. இனிப்பு கடை நடத்தி வருவதாகவும் திருமண புரோக்கர் எனவும் கூறி வந்தார். இவரது வீட்டில் நடந்த விழாவிற்கான அழைப்பிதழில் பல்வேறு நகைகள், மோதிரங்களை அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் வாகன சோதனையின்போது புது டூவீலரில் வந்த அவரிடம் கட்டிங் பிளேயர், ஸ்குரு டிரைவர் போன்ற உபகரணங்கள் இருந்தன. விசாரணையில் அவர் 19 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 126 பவுன் நகைகள் ,டூவீலர், 'டிவி' என ரூ. 48 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.