மழைநீர் சேகரிப்பு குறித்த விபரம் சேகரிப்பு! செயல்படுத்தாதோர் மீது பாய்கிறது நடவடிக்கை
Updated : செப் 23, 2022 | Added : செப் 23, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சென்னையில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் அவசியம் உணர்ந்து, அதை முறையாக செயல்படுத்த குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, 26ம் தேதி முதல், 'மொபைல் போன் ஆப்' வாயிலாக வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக 1,000 களப்பணியாளர்களை களமிறக்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. முறையாக கட்டமைப்பு ஏற்படுத்தாத, கட்டட உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பருவமழையால் சென்னைக்கு கிடைக்கும் மழை நீரை சேமித்து வைக்க, போதிய கட்டமைப்பு வசதி இல்லை. நீர்நிலைகளும் சுருங்கிவிட்டன.
கிடைக்கும் மழை நீரில் 40 சதவீதம் கடலில் கலக்கிறது; 35 சதவீதம் ஆவியாகிறது; 14 சதவீதம் பூமி உறிஞ்சுகிறது; 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது என கணக்கிடப்பட்டுள்ளது.


இதனால், நீர்மேலாண்மையை மேம்படுத்த மழை நீரை சேமித்தாக வேண்டும் என, நீர்மேலாண்மை ஆர்வலர்கள் கூறினர். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2001ம் ஆண்டு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை துவங்கினார்.அப்போது, 'மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாத கட்டடங்களில், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்' என எச்சரிக்கப்பட்டது.இதனால், பெரும்பாலான கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைக்கப்பட்டது. பின், 2006ல் தி.மு.க., அரசு இத்திட்டத்தை கண்டுகொள்ளவில்லை.

கடந்த, 2015ல் பெய்த பேய் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின், நீர்மேலாண்மையில் கவனம் செலுத்தி, வடிகால், கால்வாய் மேம்படுத்தப்படுகிறது. ஆனால், மழை நீர் சேகரிப்பு திட்டம் தீவிரம் அடையவில்லை.இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்ய குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில், 7.82 லட்சம் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், நான்கு லட்சத்திற்கும் குறைவான கட்டடங்களில் மட்டுமே, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளது.இது குறித்த, துல்லியமான விபரம், குடிநீர் வாரியத்திடம் இல்லை. இதனால், 'மொபைல் ஆப்' வாயிலாக கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணி, வரும் 26ம் தேதி முதல் ஒரு மாதம் நடைபெற உள்ளது. இதற்காக, 200 வார்டுகளில், 1,000 களப்பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு, களப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து, மத்திய - மாநில அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க அறிவுறுத்தப்பட்டது.

பருவமழைக்குமுன், அவற்றை முறையாக பராமரிக்க, அந்தந்த துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்ப, குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருடன் சேர்ந்து பேரணி, விளம்பரங்கள் மற்றும் குறும்படம் வழியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது.முறையாக பராமரிக்காத மற்றும் கட்டமைப்பு அமைக்காத உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கவும், அதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.



பராமரிப்பது எப்படி?



ஏற்கனவே அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில் நிரப்பிய, மணல், கூழாங்கல், கருங்கல் ஆகியவற்றை வெளியே எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். பின், தொட்டியின் அடியில் கருங்கல், நடுவில் கூழாங்கல், அதன் மீது மணல் என்ற முறையில் நிரப்ப வேண்டும்.
கட்டடத்தில் உள்ள மழைநீர் குழாய்களில் ஓட்டை, விரிசல், அடைப்புகள் இருந்தால், அதை சரி செய்து, மழை நீர் வீணாகாமல் பூமிக்குள் செல்வதை உறுதி செய்ய வேண்டும். புதிய கட்டமைப்பு அமைக்க, குடிநீர் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால், ஆலோசனை வழங்குவர்.

வீடுகளுக்கு வரும் களப்பணியாளர்கள், 'மொபைல் ஆப்' வாயிலாக கட்டடத்தின் முழு வடிவம், ஆழ்துளை கிணறு, அதன் மோட்டார் திறன், கிணறு, கைப்பம்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் பதிவேற்றுவர். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாதது, மேம்படுத்த வேண்டியவை குறித்து உரிமையாளர்களுக்கு, 15 நாள் அவகாசத்தில் 'நோட்டீஸ்' வழங்கப்படும். மேம்படுத்தவில்லை என்றால் குடிநீர் வாரிய சட்டபடி மேல்நடவடிக்கை எடுக்கப்படும். களப்பணியாளர்கள் வரும்போது, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். - குடிநீர் வாரிய அதிகாரிகள்

- -நமது நிருபர்- -

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X