ரூ.21 கோடி திட்ட மதிப்பில் இருவழிச்சாலை; திருவண்ணாமலை -அடரி சாலைப் பணி தீவிரம்
Added : செப் 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

தியாகதுருகம்: திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருகம் வழியே திருச்சி செல்லும் சாலை ரூ. 21 கோடி திட்ட மதிப்பில் அடரி வரை இரு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருவண்ணாமலையில் இருந்து திருச்சி செல்ல தற்போது திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை வழித்தடத்தில் வாகனங்கள் செல்கின்றன. இதைவிட குறுகிய நேரத்தில் திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருகம், அடரி, வேப்பூர் வழியாக திருச்சிக்கு செல்லமுடியும்.இது அக்காலத்தில் சித்துாரில் இருந்து தஞ்சாவூரை இணைக்கும் முக்கிய ராஜபாட்டையாக விளங்கியது. அதனால் இதற்கு தஞ்சாவூரான் பாட்டை என்று அழைக்கப்படுகிறது.இச்சாலை போதிய பராமரிப்பின்றி ஜல்லிகள் பெயர்ந்து பள்ளங்களுடன் சாலை தரமின்றி இருந்ததால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இவ்வழியே செல்வதை தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து திருச்சிக்கு குறுகிய நேரத்திற்குள் செல்லும் இவ்வழித் தடத்தை அகலப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு இதற்கான திட்ட மதிப்பீட்டை தயாரித்து கடந்த 6 மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு சென்று, ஒப்புதல் பெற்றார். திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருகம் வழியே அடரி வரை கடலுார் - சேலம் சாலையுடன் இணைக்கும் வகையில் 89 கி.மீ., துாரத்திற்கு இரு வழி சாலையாக அகலப்படுத்த ரூ. 21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது 7 மீட்டர் அகலமுள்ள இச்சாலையை 10 மீட்டராக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் தலா ஒன்றரை மீட்டர் அகலத்திற்கு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் எடுத்து ஜல்லிகள் கொண்டு நிரப்பி, உறுதிப்படுத்திய பின், தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.சாலை அகலப்படுத்தும் இடத்தில் மரங்கள் இடையூராக இருந்தால் அவை அப்புறப்படுத்தப்படுகிறது.

திருவண்ணாமலையில் இருந்து முருக்கம்பாடி வரை பணிகள் முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக வடதொரசலுார் கூட்டு ரோட்டில் இருந்து அடரி வரை சாலை அகலப்படுத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது.அதேபோல் இவ்வழித்தடத்தில் உள்ள சிறு பாலங்கள் அனைத்தும் அகலப்படுத்தி புதுப்பிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் பூர்த்தியடைந்ததும் வழிதடத்தில் பயண நேரம் குறைவதுடன் திருச்சி, திருவண்ணாமலை, வேலுார், திருப்பதி ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான சாலையாக மாறும்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X