ஓபன் எண்ட் மில்களில் உற்பத்தி நிறுத்தம்:வடமாநில தொழிலாளர்கள் ஊர் திரும்புகின்றனர்
Added : செப் 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை:மின்கட்டணம் மற்றும் மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக, ஓபன் என்ட் மில்களில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.நூல் விலை, மூலப் பொருட்கள் மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட நெருக்கடியால், கோவையிலுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக, அங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு, ஒரு மாத கட்டாய விடுமுறையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஹோலி, தீபாவளி ஆகிய இரண்டு பண்டிகைகளுக்கு மட்டுமே, வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். உற்பத்தி பாதிக்காமல் இரு பண்டிகைகளுக்கும், தொழிலாளர்கள் இரண்டு பிரிவாக அனுப்பி வைக்கப்படுவர். ஆனால் இந்த ஆண்டு, மின் கட்டணம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக தொழில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் தீபாவளியையொட்டி, தற்போது மொத்த உற்பத்தி நிறுத்தப்பட்டு, அனைத்து தொழிலாளர்களையும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக, தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.



30 நாட்களும் நிறுத்தம் அறிவிப்பு

ஓபன் எண்ட் மில்கள் சங்க தலைவர் அருள்மொழி கூறியதாவது: மின்கட்டணம், மூலப்பொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், ஓபன் எண்ட் மில்களில் 15 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளோம். ஒவ்வொரு மில்லிலும் ஒவ்வொரு மாதிரி நடைமுறையை பின்பற்றுகின்றனர். ஆட்கள், மூலப்பொருள் இருப்பு அடிப்படையில், சில மில்கள் 20 நாட்களும், சில 30 நாட்களும் நிறுத்தம் அறிவித்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X