இந்தாண்டு காலாண்டு தேர்வில்...தொடக்க கல்வி தரம் அறியலாம் வருகிறது பொது வினாத்தாள் 'ஸ்டைல்' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
இந்தாண்டு காலாண்டு தேர்வில்...தொடக்க கல்வி தரம் அறியலாம் வருகிறது பொது வினாத்தாள் 'ஸ்டைல்'
Added : செப் 24, 2022 | |
Advertisement
 

கோவை:தொடக்க கல்வி படிக்கும் மாணவர்களின், கல்வித்தரம் அறியவும், கற்பித்தல் முறைகளில் மாற்றம் கொண்டுவரவும், முதன்முறையாக, காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள், இயக்குனரகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அந்தந்த மாவட்ட தேர்வுக்குழு சார்பில், வினாத்தாள் தயாரித்து தேர்வு நடத்துவது வழக்கம். பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளுக்கு மட்டும், அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கான, வினாத்தாள் இயக்குனரகத்தில் இருந்து அனுப்பப்படும்.ஆனால் நடப்பாண்டில் முதன்முறையாக, தொடக்க வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கான தேர்வு, செயலி மூலம் நடத்தப்படுகிறது. இதேபோல், நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு, பாடத்திட்ட குழுவே, வினாத்தாள் தயாரித்துள்ளது. சமீபத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்காக, சென்னையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், வினாத்தாள் அடங்கிய சி.டி., வழங்கப்பட்டுள்ளது. இதை, வட்டார கல்வி அலுவலகங்கள் மூலம், தேர்வு நாளன்று மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் கூறுகையில்,'காலாண்டு தேர்வு, நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு நாளை துவங்குகிறது. எங்கு வினாத்தாள் பெறுவது என, முந்தைய தினம் அறிவிப்பு வரும் என காத்திருக்கிறோம்.இத்தேர்வு மதிப்பெண்களை, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றுவதால், மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X