ராமநாதபுரம்,--ராமநாதபுரத்தில் அரண்மனை அருகே மாவட்ட அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். இதில், தி.மு.க., ஆட்சியில் சொத்துவரி, மின்கட்டண உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.,விற்கு அண்ணாதுரை பிறந்தநாளை கொண்டாட தகுதியில்லை என நிர்வாகிகள் பேசினர். ராமநாதபுரம் நகரச்செயலாளர் பால்பாண்டியன் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.