திருவாடானை-ராமநாதபுரம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு கைத்தறி, கைத்திறன் துணி நுால், கதர்த்துறை முதன்மைச் செயலர் தர்மேந்திரபிரதாப் யாதவ் திருவாடானை பகுதியில் அரசு பள்ளி, சுற்றுலா இடங்களின் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.நம்புதாளையில் அரசு தொடக்கபள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், தளிர்மருங்கூர் கிராமத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் பணிகள், பஞ்சமாரியில் பயணிகள் நிழற்கூரை, மாணிக்கம்கோட்டையில் தரைப்பாலம், காரங்காட்டு சுற்றுலா மையத்தில் மாங்குரோவ் காடுகள், சுற்றுலா பயணிகள் வருகை விபரத்தை முதன்மைச் செயலர் தர்மேந்திரபிரதாப் யாதவ் ஆய்வு செய்தார்.திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகன், பி.டி.ஓ.,க்கள் பாண்டி, மேகலா ஆகியோர் உடனிருந்தனர்.