நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் அரசு மானியம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் அரசு மானியம்
Added : செப் 25, 2022 | |
Advertisement
 



திருப்புல்லாணி-திருப்புல்லாணி பகுதியில் சிறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

திருப்புல்லாணி வேளாண் உதவிஇயக்குனர் அமர்லால் கூறியது:2800 எக்டேரில் தென்னை பயிரிடப்பட்டுஉள்ளது. வாய்க்கால் மூலமாக நேரடியாக தண்ணீர் பாய்ச்சுவதால் தண்ணீர் வீணாகிறது. இதனை தவிர்க்க சொட்டு நீர் பாசனம் உதவியாக உள்ளது. பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் வேளாண்- உழவர் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தெளிப்பு நீர் பாசனம், மழைத்துவான், சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு100 சதவீத மானியம் வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்,' என்றார்.திருப்புல்லாணியில் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் நுண்ணீர் பாசனம் திட்டம் சரஸ்வதி, வேளாண் உதவி இயக்குனர் ராம்குமார் ஆகியோர் நுண்ணீர் பாசன கருவிகளை ஆய்வு செய்தனர். அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X