ராமநாதபுரம்-ராமநாதபுரத்தில் முஸ்லிம் இயக்கங்கள், கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ., கட்சி அலுவலகங்களில் நடந்த சோதனைகள், தலைவர்கள்கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் ரயில்வே பீடர் ரோடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்குபாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் செய்யது முகமது இப்ராஹீம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜிக்ரஹ்மான் முன்னிலை வகித்தார். தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறையை கண்டித்து கோஷமிட்டனர். ஐக்கிய ஜமாத், ஐ.எம்.எம்.கே., த.மு.மு.க., ஐ.யூ.எம்.எல்., என்.டி.எப்., ஒய்.என்.டி.ஜே., எம்.ஜே.கே., எஸ்.டி.பி.ஐ, வி.சி.கட்சி, பெரியார் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, நா.த., கட்சியினர், ஜமாத் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.