குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றித் திரியும் பன்றிகள்
Added : செப் 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



காரியாபட்டி --காரியாபட்டியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் பன்றிகள் சுற்றித் திரிவதால் காய்ச்சல் அச்சத்தில் உள்ளனர்.தற்போது மாவட்டத்தில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காரியாபட்டி பாண்டியன்நகர், என்.ஜி.ஓ., நகர் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி பன்றிகள் சத்தமிட்டபடி மேய்வதால் காய்ச்சல் அச்சத்தில் மக்கள் உள்ளனர். பன்றிகளை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் 5 கி.மீ., தள்ளி வளர்க்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஊருக்கு நடுவே வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி வரும் பன்றிகளைக் கண்டவுடன் நாய்கள் சண்டையிடுகின்றன. கள்ளிக்குடி- திருச்சுழி ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக கடப்பதால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.ரோட்டில் நடமாடும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்துடன் அலறியடித்து ஓடுகின்றனர். சாக்கடைகளை கிளறி விடுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு குடியிருப்பு வாசிகள் சிரமப்படுகின்றனர்.பன்றிகளை வளர்ப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X