திருவண்ணாமலை கோயிலில் புரட்டாசி முதல் சனி உற்ஸவம்
Added : செப் 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



ஸ்ரீவில்லிபுத்தூர்--ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனி உற்ஸவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் மலையடிவாரத்தில் பக்தர்கள் குவியத் துவங்கினர். நள்ளிரவு 1:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு திருமஞ்சனம், விஸ்வரூபம் பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். பின்னர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை தரிசிக்க, 3:00 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கோவிந்தா, கோபால கோஷத்துடன் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்களில், ஏராளமானோர் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.காலை 10:30 மணிக்கு ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீனிவாச பெருமாள் புறப்பட்டு, திருவண்ணாமலை அடிவார மண்டபம் வந்தடைந்தார். அங்கு மதியம் 12:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, கருட சேவை, கிரிவலம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் இதனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இரண்டு டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.* செண்பகத் தோப்பு காட்டழகர் பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.* வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயில், அர்ச்சனாபுரம் ஸ்ரீதேவி, பூமாதேவி, அழகிய சாந்த மணவாளபெருமாள் கோயில் புரட்டாசி முதல் சனியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம், அர்ச்சனை, அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.*சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ,இருக்கன்குடி பெருமாள் கோ யிலில் நேற்று அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.பின்னர் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* நந்தவனம் நடுத்தெருவில் உள்ள நாமத்துவார் சங்கத்தில் ஸ்ரீகிருஷ்ணன், ராதே சுவாமிகளுக்கு துளசியால் பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X