விருதுநகர் மாவட்டத்திலும் 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஜல் ஜீவன் திட்டம்
Added : செப் 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

2024 க்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள 1. 27 கோடி வீடுகளுக்கும், நகரங்களில் 22 லட்சம் வீடுகளுக்கும் தண்ணீர் இணைப்புகள் புதிதாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்புடன், தற்போது கிராமங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்திலும் 11 ஊராட்சி ஒன்றியங்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் துவக்கத்தின் போது ஒரு கிராமத்தில் எத்தனை வீடுகள் உள்ளன என்பதை கணக்கிட்டு, அதற்குரிய திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு இணைப்புகள் வழங்கப்பட்டன. இதற்காக திட்டத்தின் மொத்த மதிப்பில் 10 சதவீத தொகையை மக்களிடம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், நடைமுறையில் மக்களின் பங்களிப்பு தொகை வசூலிப்பதில் ஊராட்சி செயலர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

அதேபோல் கிராமங்களில் ஏற்கனவே குடிநீர் இணைப்புகள் இருந்தாலும், அதன் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு புதிதாக இணைப்புகள் கொடுக்கப்பட்டன. இதனால் குடும்பத்தினர் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகினர்.தற்போது சில கிராமங்களில் 100 சதவீதம் பணிகள் முடிந்து குடிநீர் சப்ளை நடக்கும் நிலையில், புதிதாக உருவான குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் புதிய வீடு கட்டியவர்கள் இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.

சில கிராமங்களில் 100 சதவீத குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சில வீடுகளுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படாத நிலை காணப்படுகிறது.அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் அத்திகுளம் செங்குளம் சித்தாலபுத்தூரில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெகன் என்பவரது வீடு உட்பட சிலர் வீடுகளுக்கு இன்னும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி தலைவர், ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாத நிலை காணப்படுகிறது. எப்போது குடிநீர் குழாய் இணைப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

உள்ளூர் மேல்நிலைத் தொட்டி மூலம் போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைத்த நிலையில், இத்திட்டத்தின் இணைப்பு மூலம் போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைக்காததாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இவ்வாறு பல்வேறு குளறுபடிகளின் காரணமாக இத்திட்டத்தின் நோக்கமே வீணாகிவிடும் என்ற நிலை காணப்படுகிறது.எனவே, ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தை சரியான திட்டமிடுதலுடன், போதிய குடிநீர் கிடைக்கும் வகையிலும், அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு கொடுத்து திட்டத்தின் நோக்கத்தை 100 சதவீதம் நிறைவேற்ற வேண்டும். இதனை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X