அணிவகுத்த பழமையான கேமராக்கள்
Added : செப் 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த டாக்டர் அருண், கேமரா ஆர்வலர். ஐயாயிரத்திற்கும் அதிகமாக பழமையான பல்வேறு கேமராக்களை சேகரித்துள்ளார். அவற்றில் பாதியை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் பகுதியில், பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளார். அங்கே இடமில்லாததால், மீதியை தன் வீட்டிலும் வைத்துள்ளார்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில் 'விஷூவல் கம்யூனிகேஷன்' பயிலும் மாணவர்கள், புகைப்படக் கலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தன் சேகரிப்பான பழைய கேமராக்களை கண்காட்சியாக வைத்து, விளக்கமும் அளித்தார்.


இதில், 100க்கும் அதிகமான கேமராக்கள் இடம் பெற்றன. 150 ஆண்டுக்கும் முந்தைய பழமையான கேமரா, உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட கேமரா, ரகசியமாய் படமெடுப்பதற்கான சிறிய கேமரா, நுண்ணிய உயிரினங்களை படமெடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட மைக்ரோஸ்கோபிக் கேமரா, பிலிம் கேமரா என பல்வேறு வகைகள் இதில் இடம் பெற்றன.

'புகைப்படக் கருவிகளின் வரலாறு' குறித்து மாணவர்களுக்கு அருண் விளக்கினார். பிளேட் போட்டு எடுக்கப்பட்ட காலத்தில் இருந்து, பிலிமில் வளர்ந்து, தற்போது டிஜிட்டலில் செழித்து நிற்கும் கேமரா பற்றி இவர் கூறியதை, மாணவர்கள் ஆர்வமுடன் கேட்டனர்.
இதில் இடம் பெற்றிருந்த பழமையான கேமராக்கள் இப்போதும் வேலை செய்பவையே. அவை எப்படி வேலை செய்கிறது என்பதை மாணவர்கள் உபயோகித்து தெரிந்து கொண்டனர். பல்கலைக் கழக தலைமை இயக்குனர் சேதுராமன், புராஜக்ட் இயக்குனர் டாக்டர் தாமு, டீன் வெங்கட்ரமணன் ஆகியோர் நிகழ்வில் பங்கு கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X