மதுரவாயல்:முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.ூ
இவர், கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற போது, அதே பகுதியில் இருந்த 'பேக்கரி'க்கு சென்று குளிர்பானம் வாங்கியுள்ளார்.அப்போது, அங்கிருந்த நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, 'பேக்கரி'யில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, சிறுமிக்கு அந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ரகு, 32, என்பவரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.