சர்வீஸ் சாலை, நிழற்குடை வேண்டும்
சேதமடைந்த மின் கம்பம்
ஆர்.கே.பேட் டை, இஸ்லாம் நகர் பகுதியில், 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். முதல் தெரு கிழக்கு பகுதியில் உள்ள தெரு விளக்கு மின் கம்பம் ஒன்று சேதமடைந்து இருக்கிறது. கம்பத்தின் மேல் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், கீழ் பகுதியில், கான்கிரீட் பெயர்ந்து உடையும் நிலையில் உள்ளது.இதனால், அந்த பகுதியில் வசிப்பவர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் நிறுவ அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- கே. தணிகேசன், ஆர்.கே.பேட்டை.