இன்று இனிதாக
Added : செப் 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

ஆன்மிகம்

மஹாளய அமாவாசைபுரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. திருப்பூரின் பல்வேறு இடங்களில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவிநாசி, கிங்டம் பள்ளி அருகில் உள்ள சுப்பையசாமி மடத்தில் காலை 6:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், பங்கேற்கலாம்.n அமாவாசையை முன்னிட்டு பிரார்த்தனை மட்டும் சொற்பொழிவு, திருமுருகன்பூண்டி, பொங்குபாளையம் அருகேயுள்ள அன்பு இல்லத்தில் காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. பெங்களுரூ வியாச யோகா பல்கலை இணைவேந்தர் சுப்பிரமணியம் பேச உள்ளார். இசை சொற்பொழிவுநாயன்மார்களின் புனித வரலாற்றை கேட்டு குருவருளும், திருவருளும் பெற்று கவலை நீங்கி, உடல், மனம், ஆன்ம நலத்துடன் வாழ பக்தி சுவை நிரம்பிய பெரியபுராணத்தை இசையோடு இணைந்து கேட்போம்... வாருங்கள். திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோவில், மாணிக்கவாசகர் தமிழ் அரங்கில் காலை, 6:00 மணிக்கு துவங்குகிறது. சிவபூஜை செல்வர் ஆறுமுகம் சொற்பொழிவாற்றுகிறார்.நவராத்திரி விழாதிருப்பூர், காலேஜ் ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், நவராத்திரி விழா இன்று துவங்கி, அக்., 5 வரை நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு அபிேஷகமும், மாலை, 7:00 மணிக்கு அலங்கார பூஜையும், கொலு பூஜையும் நடக்கிறது.திருவாசகம் முற்றோதல்கொடுவாய் கோவர்த்தனாம்பிகை உடனமர் நாகேஸ்வரசுவாமி கோவிலில் கைலாய வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிேஷகம் காலை, 6:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து கொடுவாய் - புத்தரச்சல் ரோட்டில் உள்ள சுப்பராயக்கவுண்டர் திருமண மண்டபத்தில் திருவாசகம் முற்றோதுதல் காலை, 7:00 மணிக்கு துவங்குகிறது. சதாசிவ பரபிரம்ம சிவனடியார் திருக்கூட்ட நிறுவனர் தாமோதரன் நிகழ்த்துகிறார்.n பொது nபொதுக்கூட்டம்மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.,வினர் சார்பில் கண்டன பொதுக்கூட்டம், அரிசிக்கடை வீதியில் மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் நடிகை விந்தியா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.பஞ்சபூத தவம்திருப்பூர், கருவம்பாளையம் அறிவுத்திருக்கோவிலில் மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை பஞ்சபூத நவக்கிரக தவம், ஆழ்நிலை தவம், சிந்தனை உரை, தலைப்பு; பஞ்சபூதங்களுக்கும் நவகோள்களுக்கும் உள்ள தொடர்பு, இரவு 7:00 முதல் 7:45 மணி வரை. தவத்தில் பங்கேற்று மன ஆரோக்கியத்தை மேம்படுத்திட ஒரு நல் வாய்ப்பு.n விளையாட்டு nகபடி போட்டிதென்னிந்திய அளவில் சிறந்த ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் கபடி போட்டி 60 அடி ரோடு வெள்ளியங்காட்டில் நடக்கிறது. திருமூர்த்தி நினைவு ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் போட்டியில் இறுதிக்கட்ட போட்டிகள் இன்று காலை, 11:00 மணியளவில் நடக்கிறது. வெற்றியாளர்களுக்கு பரிசுகள் - கோப்பைகள் வழங்கப்படும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X