மண்ணை மலடாக்கிய களைக்கொல்லி மருந்துஅதிகாரிகள் மெத்தனம்; விவசாயி வேதனை அதிகாரிகள் மெத்தனம்; விவசாயி வேதனை
Added : செப் 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

பல்லடம்,:களைக்கொல்லியால் மண் மலடானது குறித்து, புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, பல்லடம் அருகே விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.பல்லடம், உகாயனுார் - நல்லகாளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சங்கர். இவர் தனது தோட்டத்துக்கு பயன்படுத்திய களைக்கொல்லி மருந்தால், பயிர்கள் முளைக்கவில்லை. இதேபோல் பல விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து, விவசாயிகள் இணைந்து, பிப்., மாதம் கலெக்டரிடம் புகார் அளித்ததால், விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இது குறித்து, சங்கர் கூறியதாவது:இயற்கை உரங்களை பயன்படுத்தி பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். இரண்டு ஏக்கர் நிலத்தில் கம்பு பயிர் செய்ய திட்டமிட்டு, முன்கூட்டியே தனியார் களைக்கொல்லி மருந்து தெளித்தேன். மருந்து தெளித்த ஒரு வாரத்தில் பயிர்கள் அனைத்தும் கருகின.புகார் அடிப்படையில், வேளாண் துறை, வேளாண் பல்கலை, மண், நீர், பயிர் மற்றும் பயன்படுத்திய மருந்து ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து சென்றனர். ஆய்வுக்கு பின், களைக்கொல்லி மருந்து தரமானது என அறிக்கை வந்துள்ளது.களைக்கொல்லி மருந்து பயன்படுத்தி பின், ஆறு மாதங்களாக எந்த விதபயிர்களும் முளைக்கவில்லை. மண் மலடாகி விட்டது. ஆனால், அதி காரிகள் ஆய்வில் எதிர்மறையான அறிக்கை அளித்துள்ளனர். இது எப்படி சாத்தியம் என தெரியவில்லை.மாவட்ட நிர்வாகம் இது குறித்து கூடுதல் விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X