திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: வடசென்னையில் போக்குவரத்து மாற்றம்
Added : செப் 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை:'சென்னையில் இன்று திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது' என, சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.


இது குறித்து, சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:வட சென்னை பகுதியில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்பதால், வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, இன்று காலை 8:00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.என்.எஸ்.சி., போஸ் சாலை, 'மின்ட்' மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
அதற்கு பதிலாக ஈ.வெ.ரா, சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் மற்றும் பிரகாசம் சாலைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம்.மாலை 3:00 மணி முதல் ஊர்வலம் கடக்கும் வரை, பேசின் பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் சாலை, அதன் இணைப்பு சாலையில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. அதற்கு பதிலாக, மின்ட் சாலை, பிரகாசம் சாலை, ஈ.வெ.ரா, சாலை, ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம்.

ஊர்வலம் மூலக்கொத்தளத்தை அடைந்த உடன், பேசின் பிரிட்ஜ் மீது வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதற்கு பதிலாக, ராஜாஜி சாலை, ஈ.வெ.ரா., சாலை மற்றும் அம்பேத்கர் சாலையை பயன்படுத்தலாம்.
ஊர்வலம் பேசின் பாலம் சாலையில் வரும்போது, சூளை ரவுண்டானாவில் இருந்து, டெமலஸ் சாலை நோக்கி செல்வதற்கு அனுமதி இல்லை. அந்நேரத்தில் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக வாகனங்கள் செல்லலாம்.ராஜா முத்தையா சாலையில் ஊர்வலம் வரும்போது, சூளை ரவுண்டானா நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அப்போது வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
திருப்பதி குடைகள் அவதான பாப்பையா சாலையில் வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து, சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அந்நேரத்தில், பெரம்பூர் பேரக்ஸ் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம்.
பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஊர்வலம் வரும்போது, டவுட்டன் சந்திப்பில் இருந்து, பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதி கிடையாது. அவ்வேளையில், நாராயணகுரு சாலை வழியாக பயணிக்கலாம்.ஒட்டேரி சந்திப்பை ஊர்வலம் அடையும்போது, மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து, பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதி கிடையாது. அந்த வாகன ஓட்டிகள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக பயணிக்கலாம்.
ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது, கொன்னுார் நெடுஞ்சாலை, மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து, ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அப்போது, மேடவாக்கம் குளம் சாலை வழியாக பயணம் செய்யலாம்.
கொன்னுார் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஊர்வலம் அடையும் போது, ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னுார் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அந்நேரத்தில் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையில் இருந்து வி.பி., காலனி தெற்கு தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாகவும் வாகனங்கள் செல்லலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X