ஆவடி:ஆவடி காவல் ஆணையரகத்தில், பல்வேறு வழக்குகளில் மீட்கப்பட்ட, 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், மொபைல்போன்கள், பணம் உள்ளிட்டவற்றை, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், ஆவடி மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டங்களில், பல்வேறு குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட, 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான 136 சவரன் தங்க நகைகள், 491 மொபைல் போன்கள் மற்றும் 7 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, குற்றப் பிரிவு மற்றும் தனிப்படை போலீசாருக்கு, ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.