''தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு, 72 கோடியே, 42 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி
கள் வழங்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் சாந்தி கூறினார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக, பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் விவ
சாயிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும், வேளாண்மைத்துறை மூலம் இதுவரை, 94 ஆயிரத்து, 723 விவசாயிகளுக்கு, 26 கோடியே, 14 லட்ச ரூபாய் மதிப்பில் வேளாண் இடுப்பொருட்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தோட்டக்கலை மற்றும் மலைப்
பயிர்கள் துறை மூலம், 26 ஆயிரத்து, 123 விவசாயிகளுக்கு, 44 கோடியே, 19 லட்ச ரூபாய் மதிப்பில் இடுபொருட்கள், பழக்கன்றுகள், பலன் தரும் மரக்கன்றுகள், சொட்டுநீர் பாசன வசதிகள், வேளாண் கருவி
கள் வழங்கப்பட்டுள்ளன.
வேளாண் பொறியியல் துறை மூலம், 98 விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு, 2 கோடியே, ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில், வேளாண் கருவிகள், வேளாண் வாடகை மையங்கள் மற்றும் மதிப்பு கூட்டு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
இணை இயக்குனர் (பொ)
முகமது அஸ்லாம், தோட்டக்
கலைத்துறை துணை இயக்குனர் மாலினி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் உட்பட, பலர் உடன் இருந்தனர்.