கேதாரகவுரி விரத சிறப்பு பூஜை நிறைவு குறுகிய இடத்தால் பக்தர்கள் அவஸ்தை
Added : செப் 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் கேதாரகவுரி விரத சிறப்பு பூஜை மிகவும் குறுகலான இடத்தில் நடத்தப்படுவதால், பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், பார்வதிதேவி சிவபெருமானிடம் விரதம் இருந்து இடப்பாகம் பெற்றதாக ஐதீகத்தால், கேதாரகவுரி விரத வழிபாட்டு விழா, புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளயபட்ச அமாவாசைக்கு முன்தினம், 21வது நாளாக வருமாறு கணக்கிட்டு, செப்., 3ம் தேதி பூஜைகள் துவங்கியது. 21 நாட்களும், 21 விதமான பதார்த்தங்கள் படையலிட்டு, பஞ்சாசனம் மற்றும் தபசு வழிபாட்டு முறையில் நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று, 21ம் நாள் சிறப்பு வழிபாடு நிறைவு பெற்றது. இன்று மஹாளய அமாவாசை தினத்தில், கேதாரகவுரி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடக்கிறது.
பின் ஆவாகணம் செய்யப்பட்டு, தினமும் மந்திர ஜபத்தில் இருந்த கலசதீர்த்தத்தால், பிரசித்தி பெற்ற, வரலாற்று பெருமை கொண்ட கடலை தின்ற நந்தீஸ்வரருக்கு தீர்த்தாபிஷேகம் செய்யப்படும். மதியம் சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். திருமணத்தடை நீங்கவும்,குடும்ப ஒற்றுமை மேம்படவும் கேதாரகவுரி விரத வழிபாடு நடக்கிறது. இந்த கேதாரகவுரி பூஜை, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் குறுகலான இடத்தில் நடந்ததால், திரளான பக்தர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. வெளியூரில் இருந்து திருமண தடை நீங்க வேண்டி விரதம் இருந்து வரும் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X