எருமப்பட்டி அருகே உள்ள சிங்களகோம்பையில் கால்நடைகளுக்கான மலடு நீக்க சிறப்பு முகாம் நடந்தது.
முகாமுக்கு, தமிழக வேளாண்மை திட்ட முதன்மை செயலளார் சுந்தரராஜன் தலைமை வகித்து, கால்நடை வளர்ப்பேருக்கான திட்டங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில், கால்நடை வளர்ப்போருக்கு பராமரிப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.
முகாமில், செயற்கைமுறை கருவூட்டல், சினை பிடிக்காத மாடுகளுக்கு சிறப்பு மலடு நீக்கு சிகிச்சை மற்றும் கன்றுகள் பராமரிப்பு, தீவிர பராமரிப்பு மேலாண்மை பற்றி கால்நடை வளர்ப்பேருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் கால்நடை மண்டல இணை இயக்குனர் பாஸ்கர், துணை இயக்குனர் அருன் பாலாஜி, கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் மருதுபாண்டி உள்பட பலர் பங்கேற்றனர். முகாமில் கலந்து கொண்ட, 150க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை டாக்டர்கள், உதவியாளர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஏற்பாடுகளை எருமப்பட்டி கால்நடை டாக்டர் சேகர் செய்திருந்தார்.