பத்து ஆண்டுகள் சிறை வாசம் முடிந்த, 12 சிறை கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.கோவை மத்திய சிறையில், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த, 12 கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு, மகாத்மா காந்தியின், சத்திய சோதனை சுயசரிதை புத்தகத்தை, மத்திய சிறை அதிகாரிகள் வழங்கினர்.