மாணவிகளுக்கான த்ரோபால் :கோவை அரசு கல்லூரி அபாரம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மாணவிகளுக்கான த்ரோபால் :கோவை அரசு கல்லூரி அபாரம்
Added : செப் 25, 2022 | |
Advertisement
 
Latest district News

கோவை:பாலிடெக்னிக் மாணவிகளுக்கான விளையாட்டு போட்டியின் டெனிகாய்ட் மற்றும் த்ரோபால் இரண்டிலும், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி முதல் இடத்தை பிடித்தது.'இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேசன்' சார்பில், பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், மண்டல வாரியாக ஆண்டுதோறும் நடத்தப்படும்.


இவ்வகையில், இந்தாண்டுக்கான போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடக்கின்றன.கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கான த்ரோபால் மற்றும் டெனிகாய்ட் போட்டிகள், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தன. இதில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, த்ரோபால் பிரிவில், 13 அணிகளும், டெனிகாய்ட் பிரிவில் 12 அணிகளுக்கும் பங்கேற்றன.
த்ரோபால் இறுதிப்போட்டியில், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணியும், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணியும் மோதின. இப்போட்டியில், அரசு மகளிர் கல்லுாரி அணி, 2 - 0 என்ற நேர் செட் கணக்கில் பி.எஸ்.ஜி., கல்லுாரியை வீழ்த்தி, முதலிடத்தை பிடித்தது.டெனிகாய்ட் இறுதிப்போட்டியில், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அணியை வீழ்த்தி, முதல் இடத்தை பிடித்தது.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, கல்லுாரியின் துணை முதல்வர் கண்ணகி பரிசுகளை வழங்கினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X