ரிஷிவந்தியம்-தொண்டனந்தல் - மையனுார் வனப்பகுதி சாலையினை விரிவாக்கம் செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.ரிஷிவந்தியம் அடுத்த பழையசிறுவங்கூரில் இருந்து மையனுார், பெரியபகண்டை வழியாக தினமும் ஆயிரத்திற்கும்மேற்பட்ட வாகனங்கள் பகண்டைகூட்ரோடுக்கு செல்கிறது.எதிரெதிரே வரும் 2 வாகனங்கள் சுலபமாக கடந்துசெல்லும் அளவிற்கு தார் சாலை அகலமாக போடப்பட்டுள்ளது. இதில், தொண்டனந்தல் - மையனுார் வரைவனப்பகுதியினுள் உள்ள 2 கி.மீ., தொலைவிலான தார்சாலை மட்டும் குறுகலாக உள்ளது.வனப்பகுதி சாலையில்வளைவுகளும், ஏற்ற, இறக்கமும் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். அதிவேகமாக செல்லும்வாகனங்கள், இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாவதும், எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்றுகடக்கும் போது மண்ணில் சிக்குவதும் நீடித்து வருகிறது.வனத்துறை அலுவலர்கள் ஒப்புதல் அளிக்காததால், சாலையினைஅகலபடுத்த முடியாத நிலை நீடிக்கிறது. வாகன ஓட்டிகள் நலன் கருதி தொண்டனந்தல் - மையனுார் வரையிலானவனப்பகுதி தார்சாலையினை அகலப்படுத்தி, புதுப்பித்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.