கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி கல்வித் துறையில் கல்வராயன்மலை புதிய ஒன்றியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், தியாகதுருகம், உருந்துார்பேட்டை, திருநாவலுார், திருக்கோவிலுார் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.இதில், பள்ளி கல்வித்துறையில் கல்வராயன்மலை தவிர்த்து மீதமுள்ள 8 ஒன்றியங்கள் மட்டுமே இருந்தது. கல்வராயன்மலை பகுதி கிராமங்களில் உள்ள பள்ளிகள் சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் ஆகிய 3 வட்டார கல்வி அலுவலகங்கள் கட்டுப்பாட்டில் இயங்கியது.இந்நிலையில் நிர்வாக காரணங்களால் தமிழகத்தில் பள்ளிகல்வித்துறை சார்பில் 4 ஒன்றியங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, கல்வராயன்மலை தனி ஒன்றியாக அறிவிக்கப்பட்டு, வட்டார கல்வி அலுவலர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.