வனத் துறையில் நிர்வாக குளறுபடி : வன அலுவலர்கள் சங்கம் குற்றச்சாட்டு
Added : செப் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



பொள்ளாச்சி : ''நிர்வாக சிக்கலால், வனத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் பணி நியமனத்தில் தாமதம் ஏற்படுகிறது,'' என, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் நசீர், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
கடந்த, மே 13ல், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, ஜூலை 24ல், சேலம் மாவட்டம் மேட்டூரில் மின்சாரம் தாக்கி, காட்டு யானைகள் இறந்தன. இரு இடங்களிலும், வனச்சரக அலுவலர், வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். 35 ஆண்டுகளுக்கு முன், வனப்பகுதியில் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடந்தால், வனச்சரகத்தில் உள்ள வன அலுவலர்கள், சஸ்பெண்ட் செய்யப்படும் நிகழ்வுகள் நடந்தன.முன்னாள் தலைமை வனப்பாதுகாவலர் சித்திரப்பூ, அதிகாரிகளை 'சஸ்பெண்ட்' செய்வதற்கு பதில், குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

அதன்பின், அந்நடைமுறை இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தவிர, வனத்துறையில் வனக்காப்பாளராக பணிபுரிபவர்களுக்கு, வனவராக பதவி உயர்வு வழங்குவதிலும், உதவி வனப்பாதுகாவலர்களாக தேர்வு செய்யப்பட்ட 12 பேருக்கு, பணி ஆணை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஐந்து ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும், உதவி வனப்பாதுகாவலர்கள், பணியிட மாற்றம் செய்யப்படுவதிலும், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிர்வாக சிக்கலை, முதல்வர் கவனித்து, துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X