பா.ஜ., நிர்வாகி மீது தாக்குதல் : ஹோட்டல் ஊழியர்களுக்கு வலை
Added : செப் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கோவை : கோவை மாவட்ட பா.ஜ., நிர்வாகி மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்திய ஹோட்டல் ஊழியர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை மாவட்ட பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜான்சன், சரவணம்பட்டியை சேர்ந்தவர். இவரும், மகன் டேவிட்டும், ரேஸ்கோர்ஸில் செயல்படும் ஹோட்டலுக்கு, செப்., 10ம் தேதி இரவு சென்றனர்.டேவிட் பிறந்தநாள் விழா கொண்டாட, அரங்கம் முன்பதிவு செய்வதற்காக இருவரும் சென்று, முன்பணமாக, 2,500 ரூபாய் செலுத்திய நிலையில், 'பார்ட்டி நடத்தும் அரங்கை பார்க்க வேண்டும்' என்று, தந்தையும், மகனும் வலியுறுத்தினர்.

அந்த அரங்கில் ஏற்கனவே ஒரு பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. அதனால், இருவரையும் அரங்கினுள் செல்ல ஓட்டல் ஊழியர்கள் மறுத்தனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஹோட்டலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், இருவரையும் சரமாரியாக தாக்கினர். தாக்குதலில், டேவிட்டின் பல், உதடுகளில் காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
சம்பவம் தொடர்பாக, ஜான்சன் அளித்த புகாரில், ஹோட்டல் அக்கவுன்டன்ட் விஷ்ணு பாரதி, 24, மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 'பவுன்சர்'கள் மீது, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்துஉள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X