ரயில் முன்பதிவில் ரூ.56 கோடி மோசடி : கைதான பீஹார் வாலிபர் 'திடுக்' தகவல்
Added : செப் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



திருவண்ணாமலை : போலி ரயில்வே முன்பதிவு இணையதளத்தை பயன்படுத்தி, 56 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பீஹார் வாலிபரை, திருவண்ணாமலை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.



வேலுாரில், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதள சாப்ட்வேரை பயன்படுத்தி, விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்து, டிக்கெட் விலையை விட, 200, 300 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது.இதையடுத்து, விழுப்புரம், திருவண்ணாமலை ரயில்வே போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் அடங்கிய தனிப்படையினர், இரண்டு மாதமாக விசாரித்தனர்.

ஒரு மாதத்துக்கு முன், காட்பாடி, சி.எம்.சி., மருத்துவமனை பகுதிகளில், ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தி இருவரை கைது செய்தனர்.விசாரணையில், 'தட்கல் சாப்ட்வேர் ஆல்.இன்.,' என்ற இணையதளம் மூலம், சாப்ட்வேரை வாங்கியதும், பீஹார் மாநிலம், தானாபூர் பகுதி சைலேஷ்யாதவ், 27, விற்பனை செய்ததும் தெரிந்தது.
பீஹார் சென்று அவரை கைது செய்து, நேற்று முன்தினம் திருவண்ணாமலை அழைத்து வந்து விசாரித்தனர்.இதில், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்திற்குள் சென்று, டிக்கெட் முன்பதிவு செய்வது போல சாப்ட்வேர் உருவாக்கிய, 10 பேரிடம், அதை வாங்கியது தெரியவந்தது.
இதை அவரது இணையதளமான, 'தட்கல் சாப்ட்வேர் ஆல்.இன்.,' வாயிலாக, 3,485 பேரிடம், ஒன்பது மாதமாக டிக்கெட் விற்று, 98 லட்சத்து, 20 ஆயிரத்து, 946 ரூபாய் வருவாய் ஈட்டியதும் தெரிந்தது. இதில், 75 சதவீதம் சாப்ட்வேர் உருவாக்கி தந்தவர்களுக்கும், மீதியை சைலேஷ் யாதவும் பங்கிட்டு கொண்டுள்ளனர்.
இந்த சாப்ட்வேரால் நாடு முழுதும், 7,000 ரயிலில் பயணம் செய்ய, எட்டு மாதத்தில் 1.25 லட்சம் டிக்கெட்டுகளை, 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பதிவு செய்து விற்பனை செய்துள்ளதும் தெரியவந்தது.இதற்காக, 13 மொபைல்போன், நான்கு போலி வங்கி கணக்கு பயன்படுத்தியுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X