திண்டுக்கல் : ''நாட்டின் காவலர்கள் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., தான்,'' என, திண்டுக்கல்லில் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கூறினார்.
பா.ஜ.,வை பொறுத்த வரை இந்த சூழ்நிலையில் தி.மு.க.,அரசையோ,காவல்துறையையோ விமர்சிக்க விரும்பவில்லை.சமூகவிரோதிகளை,பயங்கரவாத சக்திகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்திதண்டணை பெற்று தருவார்கள் என்று போலீஸ் துறை மீது நம்பிக்கை இருக்கிறது. பயங்கரவாதத்தை அரசு தான் எதிர்க்க முடியும்.
மக்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியும். பா.ஜ., போலீஸ் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும். இது கட்சி அரசியல் பேசும் நேரமில்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சணையின்றி போலீசார் கைது செய்ய வேண்டும். எதிரிகளுக்கு இலக்கு இந்த தேசம் தான். பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., கிடையாது, என்றார்.