செய்திகள் சில வரிகளில் கரூர்
Added : செப் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


குடிநீர் குழாய் சேதம்
நோய் பரவும் அபாயம்
கரூர், செப். 26-
கரூர், காந்தி கிராமம், இ.பி.காலனியில் பொது குடிநீர் குழாய் உள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அதில், தண்ணீர் பிடிக்க போடப்பட்டுள்ள திருகு குழாய் சேதமடைந்து உள்ளது. இதனால், எந்நேரமும் தண்ணீர் கசிந்து வீணாகிறது. குழாயிலிருந்து வெளியேறும் தண்ணீர், தொட்டியை சுற்றி, தேங்கி, அசுத்தமாக காட்சியளிக்கிறது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் இருந்து, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. எனவே, காந்தி கிராமம், இ.பி. காலனியில் உள்ள பொது குழாய்களை

முறையாக பராமரிக்க வேண்டும்.

சாலையோரத்தில்
தேங்கும் கழிவுகள்
கரூர், செப்.26-
கரூர் அருகே ஆச்சிமங்கலத்தில், ஜவுளி உற்பத்தி
நிறுவனங்களில் சேகரமாகும் கழிவுகளை, கரூர் - திருச்சி
தேசிய நெடுஞ்சாலையில், தோரணக்கல்பட்டி
சாலையோரத்தில் கொட்டுகின்றனர்.
இப்பகுதியில் போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாததால்,
கழிவுகள் பல நாட்களாக சாலையோரத்தில் குவிந்துள்ளன. காற்று வீசும்போது, அதிலுள்ள பாலித்தீன் பைகள், துண்டு துணிகள் போன்றவை சாலையில் பறக்கின்றன. இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

பகலில் எரியும்
மின் விளக்குகள்
கரூர், செப். 26-
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின் கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு, பணியாளர்கள் காலை, மாலை நேரங்களில் விளக்குகளை சரியாக இயக்குவது கிடையாது. பல இடங்களில் தெருவிளக்குகள் பகல் நேரத்திலும் தொடர்ந்து எரிகின்றன. இதனால், மின்சாரம் வீணாகிறது. குறிப்பாக கரூர், உழவர் சந்தை பகுதியில் உள்ள அம்மா உணவகம் அருகே, தெரு விளக்குகள் அடிக்கடி பகலில் எரிகின்றன. இதேபோல இரவு நேரங்களில் மின் விளக்குகளை போடாமல் விட்டு விடும் செயல்களும் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட துறையினர், தெரு மின் விளக்குகள் உரிய நேரத்தில் எரிவற்கும், அணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலித் விடுதலை இயக்க
மாநில செயற்குழு கூட்டம்
கரூர், செப்.- 26-
கரூரில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். விடுதலைப் போராட்ட வீராங்கனை குயிலியின் நினைவு தினத்தை ஒட்டி, அக்.,5ல் அவரது நினைவிடத்தில், அஞ்சலி செலுத்துவது, தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்கள், பூமிதான நிலங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த நிலங்களை அரசு மீட்டு, மீண்டும் பட்டியல், பழங்குடியின மக்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் விடுதலை வீரன், துணை தலைவர் ராஜகோபால், மாநில மாணவரணி செயலாளர் பீமாராவ், மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி, மாநில அமைப்பாளர் விசுவாசம் உட்பட பலர் பங்கேற்றனர்.
லாரி மோதி முதியவர் படுகாயம்
குளித்தலை, செப். 26-
குளித்தலையை அடுத்த, மேல சிந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் மொட்டையாண்டி, 76. இவர், கடந்த 23ம் தேதி, காலை 10:00 மணியளவில், மளிகை சாமான் வாங்கிகொண்டு, வீட்டுக்கு சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், மேலசிந்தலவாடி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது.
இதில் படுகாயமடைந்த மொட்டையாண்டி, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் படி, டிப்பர் லாரி டிரைவர் சின்னையம்பாளையத்தை சேர்ந்த பாண்டியன், 29, மீது லாலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
டி.என்.பி.எல்., சார்பில்
செப்.,30ல் மருத்துவ முகாம்
கரூர், செப். -26-
புகழூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்.,) சார்பில் வரும் செப்., 30ல் இலவச நடமாடும் மருத்துவ முகாம் நடக்கிறது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
டி.என்.பி.எல்., சார்பில் இலவச நடமாடும் மருத்துவ முகாம், ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் செப்., 30ல் நடக்கிறது. இதில், ஓனவாக்கால்மேடு, நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதுார், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதிகளில் நடக்கும் முகாமில் டாக்டர் ராஜலட்சுமி, சுகந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்று, நோயாளிகளை பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் வழங்க உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா
பிறந்த நாள் கொண்டாட்டம்
கரூர், செப். -26-
கரூர், லைட் ஹவுஸ் கார்னரில், பா.ஜ., சார்பில் அக்கட்சியின் முன்னோடியான பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின், 107வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது.
இதில், 33வது வார்டு தலைவர் விஜயன் தலைமை வகித்தார். பண்டிட் தீனதயாள் உபாத்யாயா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள்
வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாநகர தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் ரமேஷ், மத்திய, மாநகர இளைஞர் அணி தலைவர் சீனிவாசன், மாநகர தகவல் தொழில்நுட்ப தலைவர் ராஜேஷ் உட்பட பலர்
பங்கேற்றனர். காய்ச்சல் பரிசோதனை முகாம்
கரூர், செப். -26-
கரூர் மாவட்டம், உன்னுாத்துப்பாளையத்தில், சுகாதாரத் துறை சார்பில் காய்ச்சல் சிறப்பு பரிசோதனை முகாம் நடந்தது.
இதில், செவிலியர் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர், முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.
பின்னர் உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினர். அதிக காய்ச்சல் உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து கொரோனா பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ
மனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X