பயணிகள் உயிரோடு விளையாடும் கரூர் மாநகராட்சி அதிகாரிகள்
Added : செப் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


கரூர்; கரூர் பஸ் ஸ்டாண்ட் கட்டட மேற்கூரை சி‍மென்ட் பூச்சுகள் இடிந்து விழுந்து வரும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் பெயரளவுக்கு நடவடிக்கை மேற்கொண்டு கண்டும் காணாமல் உள்ளனர்.
தற்போதைய கரூர் பஸ் ஸ்டாண்ட் வளாகம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், கட்டட மேற்கூரை சிமென்ட் அடிக்கடி இடிந்து விழுகிறது. கடந்த, 13ம் தேதி காலை, மதுரை பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில், மேற்கூரை திடீரென பெயர்ந்து கீழே விழுந்தது. இதனால், பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர்.

தொடர்ந்து, 15ல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் சார்பில், 3 நாள்களுக்குள் கடைகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் தென்புற கட்டடத்தில், ஈரோடு சாலை மற்றும் போக்குவரத்து துறை பொறியியல் கல்லுாரி குழுவினர் ஆய்வு
மேற்கொண்டனர்.
அவர்கள் அளித்த அறிக்கையில், ''கட்டட உறுதித்தன்மை பாதுகாப்பானதாக இல்லாததால் பயன்பாட்டுக்கு ஏற்றதில்லை. கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தவும்'' என தெரிவித்துள்ளனர்.
ஆனால், நோட்டீஸ் வழங்கப்பட்ட கடை உரிமையாளர்கள், காலி செய்யாததால், அந்த பகுதியில் மக்கள் செல்ல முடியாதவாறு, பேரி கார்டு மற்றும் பிளாஸ்டிக் பைப்புகளை வைத்து அடைத்தனர். இரண்டு நாள்கள் அமைதியாக இருந்த கடை உரிமையாளர்கள், நேற்று முன்தினம் முதல், அந்த தடுப்புகளை அகற்றி விட்டு மீண்டும் கடையை திறந்து
விட்டனர்.
இது குறித்து மாநகராட்சி கவுன்சிலர்கள் கூறியதாவது:
பஸ் ஸ்டாண்ட் கடைகளை அகற்றுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டதும், கடை உரிமையாளர்கள், அதிகாரிகள், அமைச்சர் வரை முறையிட்டும் கூட, மக்கள் பாதுகாப்பு என்பதால் இதில், தலையிட மறுத்து விட்டனர்.
எந்த தலையீடும் இல்லாதபோது, கடைகளை 'சீல்' வைத்திருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது போல பாசாங்கு காட்டி, தடுப்பு மட்டும் வைத்தனர். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் கடைகளை திறந்துவிட்டனர். கட்டடம் இடிந்து ஏதாவாது விபரீதம் நடத்த பிறகு நடவடிக்கை எடுப்பதில் பயன் இல்லை. உடனடியாக கடைகளுக்கு 'சீல்' வைத்து, மீண்டும் தடுப்புகளை வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X