'கல்லா' கட்டும் அலுவலர்களால் வரி பாக்கி ரூ.73.96 கோடி : கரூர் மாநகராட்சியில் தொடரும் அவலம்
Added : செப் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


கரூர்: கரூர் மாநகராட்சியில் ரூ.73.96 கோடி வரி வசூல் பாக்கி உள்ள நிலையில், வருவாய் அலுவலர்கள், 'கல்லா' கட்டுவதில் ஆர்வம் காட்டுவதால், நிலுவை அதிகரித்து வருகிறது.
கரூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு வரி கட்டணம் மூலம் வருமானம் வருகிறது. இதில், 75,462 கட்டடங்களில் சொத்து வரி, 4,393 இடங்களில் காலி மனை வரி, 3,698 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களில் தொழில் வரி, 51,993 இணைப்புகளில் குடிநீர் வரி வசூலிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நிதியாண்டும், அரையாண்டு இடை
வெளியில் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டு, சீராய்வு பணி நடந்து வருகிறது. எனவே, வருங்காலங்களில் கூடுதலாக வரி வருவாய்
கிடைக்கும்.
இந்நிலையில் மாநகராட்சியில் சொத்து வரியில், 29.02 கோடி ரூபாய், காலிமனை வரியில், 2.34 கோடி ரூபாய், தொழில் வரியில், 2.81 கோடி ரூபாய், குடிநீர் வரியில், 11.05 கோடி ரூபாய், வரி இல்லாத வருவாய், 13.26 கோடி ரூபாய் உள்பட மொத்தம், 73.96 கோடி ரூபாய் வரி வசூல் நிலுவையில் உள்ளது.
சொத்துக்களுக்கு வரி நிர்ணயம் செய்வது, மேற்கண்ட வரிகளை வசூல் செய்வது உள்ளிட்ட பணிகளை, மாநகராட்சி வருவாய்
பிரிவு பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், வருவாய் பிரிவில் அலட்சியம் காட்டி வருவதால், மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டில் பழைய மற்றும் புதிய வரி என மொத்தம், 80.27 கோடி ரூபாய் வரி வசூல் செய்ய பாக்கி உள்ளது. இதுவரை, 6.31 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி கடும் நிதி நெருக்கடியில், சம்பளம் கொடுக்க கூட திணறி வருகிறது. என்னதான் உயர் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டாலும் கூட, வருவாய் பார்த்து பழகிவிட்ட அலுவலர்கள், அதை இழக்க தயாராக இல்லை.
மக்களிடமிருந்து பணம் பறிக்க பல வகையில் நெருக்கடி தருகின்றனர். உதாரணமாக, புதிய வரி விதிப்பின்போது 'மாமூல்' தர தயாராக இருந்தால், உடனடியாக ரசீது கிடைக்கும். இல்லாவிட்டால், பல மாதங்கள் அலைந்தாலும் பயன் இருக்காது. புதிய சொத்துக்கு வரி நிர்ணயம் செய்யும்போது, பல ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக்கொண்டு அளவுகளை குறைத்து, வரி குறைவாக நிர்ணயம் செய்கின்றனர்.
இதுமட்டுமல்லாது, பல இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட வரியை விதித்தாலும், வரியை குறைத்து போட்டுள்ளதாக கூறி, பண வசூலில் ஈடுபடுகின்றனர்.
இப்படி, அலட்சியமாக இருப்பதால், சொத்து வரி, குடிநீர் வரி வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு மேல், வரி நிலுவையில் வைத்துள்ள வணிக நிறுவனங்கள், வீடுகள் ஏராளமாக உள்ளன. அவற்றுக்கு நோட்டீஸ் வழங்குவது உள்ளிட்ட பணிகளை கூட செய்வதில்லை.
இந்த நிதியாண்டில், 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், 7.86 சதவீதம் மட்டுமே வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற ஊழல்கள் மாநகரம் முழுவதும் காணப்படுகிறது. இவற்றை களை எடுத்தாலே, மாநகராட்சியின் வருவாய் இரு மடங்காக அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X