மகாளய அமாவாசை: காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
Added : செப் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



மகாளய அமாவாசையை ஒட்டி, கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள், காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
புரட்டாசி மகாளய அமாவாசையில் பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்ய வேண்டும். மகாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்கள் அனைவரும் சூரிய, சந்திர உலகத்துக்கு வருவதால், அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது.

அன்று தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி, மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்து விடுகிறாள் என்பது ஐதீகம்.
இந்நிலையில் நேற்று, மகாளய அமாவாசையை ஒட்டி, கரூர் மாவட்டத்தில் நெரூர், வாங்கல், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரையோரம், காலை முதலே ஏராளமான பொதுமக்கள் நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலையில் முன்னோர்கள் விரும்பி உண்ணும் உணவுகளையும் படைத்திருந்தனர். பின்னர் முன்னோர்களுக்காக சிறப்பு வழிபாடும் நடத்தினர்.
நெரூர் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்தனார். இதனால், கரூர் - நெரூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குளித்தலையில்
குளித்தலை, கடம்பன் துறை காவிரி ஆற்றில், பொதுமக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து, புனித நீராடி, தேங்காய், பழம், எள் படையலிட்டு வழிபட்டனர். பின்னர், வாழையில் எள் பிண்டத்தினை காவிரி ஆற்றில் கரைத்து, அருகில் உள்ள கோவில்களில் வழிபட்டு, பசு மாடுகளுக்கு அ
கத்திக் கீரை வழங்கினர். இதில் குளித்தலை, அய்யர்மலை, பஞ்சப்பட்டி, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் வந்திருந்தனர்.
மாயனுாரில்
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மாயனுாரில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் காவிரி கரையில் அமைந்துள்ளதால், மகாளய அமாவாசையை ஒட்டி, பக்தர்கள், காவிரி ஆற்றில் புனித நீராடினர். பின்னர், அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X